சென்னை ஆக, 22
தமிழ் ரசிகர்களை பயமுறுத்தும் வகையிலான வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது என நடிகர் சல்மான் கூறியுள்ளார். கிங் ஆஃப் கோதா பட ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “தமிழில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கேங்ஸ்டர் படங்கள் வெளியாகின்றன. எனக்கு ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் நிச்சயம் தமிழில் வில்லனாக நடிப்பேன் ஹீரோ வில்லன் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்க மாட்டேன்” என்றார்.