ஜெர்மனி ஆக, 18
இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை பிரியா வரலாறு படித்துள்ளார். 20 வயதுக்குட்பட்ட பெண்கள் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பிரியா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனை லாரா செலிவை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தார் முன்னதாக இந்த சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை ஆண்டிம் பங்கால் பெற்றார்.