புதுடெல்லி ஜூலை, 29
2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளன இந்திய அணியில் எந்த வீரர்கள் எந்த ரோலில் செயல்பட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் 2013 சாம்பியன் டிராபி வென்ற பிறகு 10 ஆண்டுகளாக எந்த விதமான ஐசிசி கோப்பையும் வெல்ல முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. எனவே இந்தியா அணி சொந்த மண்ணில் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.