சென்னை ஜூலை, 27
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரை சந்தித்து அவருடன் பணியாற்றுவதை விஜய் உறுதி செய்யும் பட்சத்தில், மிகப்பெரிய திட்டத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் எதிர்கொள்ள தயார் ஆவார் என்றே பார்க்கப்படுகிறது. 2024 இலக்கா 2026 என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது என ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.