சென்னை ஜூலை, 24
கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.