சென்னை ஜூலை, 26
ஜி 20 மாநாட்டின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. 26, 27 தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் நிலம் அழிந்து போவது, சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, நீடித்த நிலையான கடல்சார் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 28ம் தேதி ஜி 20 நாடுகளை சேர்ந்த 35 பேர் மட்டும் பங்கேற்பார்கள்.