சென்னை ஜூலை, 21
மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டா நிலங்களில் சடலங்களை புதைப்பதை எதிர்த்து பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் விதிகளுக்கு மாறாக உடலை புதைத்து இருந்தால் அதை அங்கிருந்து அகற்றி மயானத்தில் புதைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.