சென்னை ஜூலை, 21
சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது வருகை உறுதியானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.