சென்னை ஜூலை, 4
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத காவலில் செந்தில் பாலாஜி இருப்பதாக அவரது மனைவி மேகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.