சென்னை ஜூலை, 4
வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். 2024 ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26க்குள் விண்ணப்பத்திற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.