சென்னை ஜூன், 27
வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது அதன் பின் வடசென்னை இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று உறுதியளித்தார்.