புதுக்கோட்டை ஜூன், 18
புதுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது கனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1984 முதல் 1989 வரை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த முகமது கனி காங்கிரஸ் நகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். முகமது கனி மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தமிழக அரசியல் கட்சியினர் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.