புதுடெல்லி ஜூன், 12
மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இந்தியா வென்றது. முதல்முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக அன்னுவும், நீலமும் கோல் அடித்து அசத்தினர். டெஸ்ட் கோப்பையை இந்தியா தவற விட்டுள்ள நிலையில் தற்போது ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.