புதுடெல்லி ஜூன், 11
பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார். அதேபோல் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சீராக இருந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.