சென்னை மே, 12
முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு வெகு தொலைவில் இல்லை என தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பேசிய அவர் தமிழகத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈட்டி வருகிறார். இதன் மூலம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற அவரின் கனவு விரைவில் நிறைவேறும் என தெரிவித்தார்.