புதுடெல்லி மே, 12
பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை காண தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகளில் உள்ள தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை பின்பற்றாத 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.