நீலகிரி மே, 10
நீலகிரியில் பணிபுரியும் கர்நாடக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் உள்ள கர்நாடக தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.