சென்னை மே, 7
ஆற்றலும், துணிவும், ஆளுமையும் மிக்க முதல்வர் அனைத்தையும் எதிர்கொண்டு வென்று காட்டுவார் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை கூறினார். சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஏதாவது சட்டத்தை ஆளுநர் வகுத்து தந்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர் குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிதம்பரம் சிறுமியருக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தவில்லை நடத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.