பெங்களூரு ஏப்ரல், 23
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூரில் மதியம் 3:30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே இன்று வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.