சென்னை ஏப்ரல், 23
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்தம் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் சார்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களுடன் துறை சார்ந்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.