சென்னை ஏப்ரல், 19
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் மீனவர்கள் 14 பேருடன் ஆலோசனை நடந்து வருகிறது. நொச்சிக்கு குப்பத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகளை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஆணையர் சுகன்தீப்சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.