புதுடெல்லி ஏப், 22
டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவிலிருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார். பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றதில் இவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோடு அவரது அரசு பங்களாவையும் காலி செய்யுமாறு கூறப்பட்டது. இதனால் 20 ஆண்டுகளாக வசித்து வந்த பங்களாவிலிருந்து ராகுல் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.