கேரளா ஏப்ரல், 21
இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 24 கேரளா வரும் பிரதமர் மோடி மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். திருவனந்தபுரம்-காசர் கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. அவரது வருகையை ஒட்டி பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமரின் வருகையை பிரச்சார யுக்தியாக பாரதிய ஜனதா கட்சி பார்க்கிறது.