சென்னை ஏப்ரல், 15
ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.