கொல்கத்தா ஏப்ரல், 14
நடப்பு ஐபிஎல் தொடரின் 19 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் விளையாடிய கொல்கத்தா இதுவரை இரண்டில் வென்றுள்ளது. அதே நேரத்தில் மூன்று போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் மொத்த எதிர்பார்ப்பும் ஐதராபாத் அணி பக்கமே உள்ளது.
