புதுடெல்லி ஏப்ரல், 8
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் சூதாட்ட இணையதளங்கள் குறித்த விளம்பரங்களை ஆங்கிலம், இந்தி மொழி செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. இந்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடக் கூடாது என்று கூறியுள்ளது.