சென்னை ஏப்ரல், 8
ஏப்ரல் 10 ம் தேதிக்குப் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் நடக்கலாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவார். அப்போதுதான் தமிழகத்தில் சிலரின் உண்மை முகம் தெரிய வரும் என அவர் தெரிவித்தார் மேலும் மக்களைப் பற்றி கவலைப்படும் ஒரே கட்சி பாஜக தான் உலகின் சிறந்த தலைவர் பட்டியலில் மோடி உள்ளார் என்றார்.