புதுடெல்லி ஏப்ரல், 7
ஜனநாயகம் பற்றி பேசும் மோடி அரசு அதனை தங்களது செயலில் காட்டுவதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் போக வேண்டிய தேவை என்ன இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை இருக்கிறார்களே பழைய ரயிலில் புதிய இன்ஜினை மாட்டி கொடியசைப்பதை தவிர பாரதிய ஜனதா அரசு வேறொன்றும் செய்வதில்லை என காட்டமாக விமர்சித்தார்.