புதுடெல்லி மார்ச், 28
டெல்லியில் 2015-2023 காலகட்டத்தில் மொத்தமாக 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக அவர் வர இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும். இரட்டை திறன் கொண்ட தண்ணீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை அமைத்துள்ளோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் உள்ளது என்றார். டெல்லியில் 101 மேம்பாலங்கள் உள்ளன.