புதுடெல்லி மார்ச், 28
நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட், பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் எடுக்கப்பட்டு இளைஞர்கள் சேரும் வகையில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது இதற்கான தீர்வுகள் முறையாக நடத்தப்பட்டு ஆட்கள் சேர்க்கப்படுவர் என்று கூறியுள்ளனர்.