சென்னை மார்ச், 26
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.