கர்நாடகா மார்ச், 21
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். முதல் இரண்டு ஆண்டுக்கு இந்த உதவி தொகையும், பின் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.