ஈரோடு ஆகஸ்ட், 13
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தேசிய கொடி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடியை வினியோகம் செய்தனர். மக்களும் ஆர்வத்துடன் தேசிய கொடியை பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறும்போது, இதேபோல் சுதந்திர திருநாள் கொண்டாடும் வகையில் ஈரோட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், உணவு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.