ஈரோடு ஆகஸ்ட், 16
நாடு முழுவதும் நேற்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தி, பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு கெட்டிநகரில் உள்ள கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு தேசியக்கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு புடவை கூட தேசியக்கொடியால் கட்டப்பட்டிருந்த காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. பக்தர்கள் மிகவும் தேசபக்தியுடன் அம்மனை வழிபட்டு சென்றனர்.