தென்னாப்பிரிக்கா பிப், 11
மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 129/4 என்ற ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 126/9 மட்டுமே எடுத்ததால் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலக கோப்பையில் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்கா தோற்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது.