Spread the love

வேலூர் பிப், 6

வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 11 ம் தேதி வரை நடக்கிறது. இதில் முதற் கட்ட உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கி 8 ம்தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு 9 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையும் நடக்கிறது.

இன்று காலை அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நடந்தது. இதற்காக வருபவர்கள் அழைப்புக்கடிதம், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு வந்து இருந்தனர். ஒரு நாளைக்கு 400 பேருக்கு உடற்தகுதி தேர் வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2-ம் நிலை காவலர் உடற்த குதி தேர்வுக்கான பணிகளில் டிஐஜி முத்துசாமி தலைமையில், காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 120 காவல் துறையினர் ஈடுபட்டனர். காவலர் தேர்வு முழுவதும் கேம ராவில் பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் பேரிகார்டுகள் அமைக் கப்பட்டு உடற்தகுதி தேர்வுக்கு வந்தவர்களை உயரம் அளவீடு செய்தல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவைகளில் பங்கேற்க செய்தனர். உடல் தகுதி தேர்வில் பங்கேற்க நேற்று இரவு முதலே ஸ்டேடியத்திற்கு வெளியே வாலிபர்கள் காத்திருந்து உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *