தேனி பிப், 6
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் பணியாற்றி வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்துதேனி மாவட்டத்தின் 18 ஆவது ஆட்சியராகவும், தேனி மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியாளராகவும் ஆர்.வி.ஷஜீவான அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றியபின் திங்கள்கிழமையான இன்று மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியான முதல் மனுவினை பெற்றுக் கொண்டார். மேலும் இந்த நிதழ்வின்போது PC பட்டியினை சேர்ந்த சுந்தரராஜா, தமாரைக்குளம் ராமையா ஆகியோர் இலவச வீட்டுமனை பட்ட வழங்கக்கோரியும், G. உசிலம்பட்டி கண்ணன் இருசக்கர வாகணம் வழங்கக்கோரியும், பெரியகுளம் ராஜதுரை பெட்டி கடை வைப்பதற்கு உதவி கோரியும் மணு அளித்தனார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனார்.