அகமதாபாத் பிப், 1
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியுடன்1-1 என்ற சமநிலை வைக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியை தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். ஒரு நாள் தொடரை இழந்த நியூசிலாந்து டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. யாருக்கு வெற்றி என்பது ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பாக உள்ளது.