சேலம் பிப், 2
சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12 ம்தேதி 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கலர் பெல்ட், பிளாக் பெல்ட் அடிப்படையில் போட்டி நடத்தப்படும். நுழைவு கட்டணம் தனிநபர் அளவில் பங்கேற்க ரூ.800-ம், குழுவாக கலந்து கொள்ளும் போட்டியில் ஒவ்வொரு நபரும் தலா ரூ.800-ம் செலுத்த வேண்டும். இந்த பதிவு காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை நடைபெறும். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி மாலை 5 மணி அளவில் முடிவடையும். இப் போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷன் தலைவர் ஷிகான் சங்கரன் முன்னின்று செய்து வருகிறார்.
இதில் உறுப்பினர்களாக அகில இந்திய காரத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை பங்கேற்கின்றன. மேலும் விபரங்களுக்கு சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷனை தொடர்பு கொள்ளுமாறு அதன் தலைவர் ஷிகான் சங்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.