கரூர் ஆகஸ்ட், 12
மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.
இதில் மாணவர்கள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.