கரூர் ஆகஸ்ட், 14
கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற 31 ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது கடந்தாண்டு எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதோ அதேபோல் அதே பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது, கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில், நொய்யல், புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம், வேலாயுதம்பாளையம், பாலத்துறை, தோட்டக்குறிச்சி, மரவா பாளையம், தளவாபாளையம் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல்துறை நிலையத்தின் கட்டுப்பாட்டில் இந்து முன்னனியினர், காவல் துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, நெப்போலியன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.