தேனி ஜன, 16
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கெளமாரியம்மன் திருக்கோவிலில் தைத்திருநாளை முன்னிட்டு கவுமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தும் விளக்கேற்றியும் வழிபட்டு சென்றனர்.