செங்கல்பட்டு ஆகஸ்ட், 12
செங்கல்பட்டு உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் ரூ.12 லட்சம் வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது. புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.