மாமல்லபுரம் ஆகஸ்ட், 11
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
மேலும் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிகளில் இருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள், போட்டி நடைபெறும் விடுதிகள் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உணர்வுடன் பணியாற்றிய காவல் துறையினரை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பாராட்டினார்.
மேலும் அனைத்து காவல் துறையினருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார். இதில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சத்தியபிரியா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், திருக்கழுக்குன்றம் காவல்துறை தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.