கவுகாத்தி ஜன, 10
3 போட்டிகள் கொண்ட இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்திகள் நடைபெறுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் திரும்பியுள்ளதால் இந்தியா பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது. அதே சமயம் டி20 தொடரை இழந்த இலங்கை அணி அதனை அதற்கு பதிலடி கொடுக்க ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் உள்ளதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். பகல் 1:30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.