நீலகிரி ஜன, 9
ஊட்டி, குன்னூர் நகர வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் ஒவ்வொரு குழுவினரையும் அழைத்து நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக 6 வாக்குச்சாவடி குழுவினரை கடந்த 6-ந் தேதி அன்று குன்னூர் நகர அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிசாமி, கிளை செயலாளர்கள் சிக்கந்தர், நாகராஜ் மற்றும் வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கலந்துக்கொண்டனர்.