விழுப்புரம் ஜன, 8
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2 புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நிலையில் 4 வழி சாலையை 2 பகுதிகளிலும் இரும்பு பைப்புகளால் அடைத்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியை பொது மக்கள் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்வதற்கு சுரங்க வழி பாதை அமைக்ககோரி கண்டமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.