திருச்சி டிச, 29
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார் காலை 9:45 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து 12 மணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தை திறந்து வைக்கிறார். மதியம் மருத்துவத்துறை கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.