திருச்சி டிச, 26
உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜவ்வரிசி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க, தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு , பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி பிணைபத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயணம் மற்றும் உணவு பொருள்களை தொழிற்சாலையிலேயே உள்ள கிட்டங்கில் வைத்து சீலிடப்பட்டுள்ளது.