தருமபுரி டிச, 28
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நல்லம்பள்ளி யூனியன், மானியதஅள்ளி பஞ்சாயத்து, மேல்பூரிக்கல் கிராமத்தில் ரூபாய் 2.4 லட்சம் மதிப்பீட்டிலும், பாளையம் புதூர் பஞ்சாயத்து, பாளையம்புதூர் கிராமத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ஏலகிரி பஞ்சாயத்து, கொட்டாவூர் கிராமத்தில் ரூபாய் 2.4 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய மூன்று மின்மாற்றிகளை தர்மபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன், உதவி பொறியாளர்கள் அமுல்ராஜ், ஸ்ரீதர், பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட துணை தலைவர் முத்துவேல், இளைஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் முனிவேல், ஒன்றிய செயலாளர்கள் முருகன், அறிவு, பஞ்சாயத்து துணை தலைவர்கள் நாகலிங்கம், விஜியராகவன், வார்டு மெம்பர் பரமசிவம் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.